தமிழ் அகதிகளுடன் சேர்ந்து தமிழகம் வந்த சிங்கள காதல் ஜோடி
ராமேஸ்வரம்: தனுஷ்கோடிக்கு வந்த தமிழ் அகதிகளுடன் சேர்ந்து சிங்கள காதல் ஜோடி ஒன்றும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனுஷ்கோடிக்கு நேற்று படகு மூலம் 21 பேர் அரிச்சமுனைப் பகுதியில் வந்திறங்கினர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
19 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்தது. மற்ற இருவரும் காதல் ஜோடிகள், சிங்களர்கள். இதனால் குழம்பிய போலீஸார் அவர்களை தனியாகப் பிரித்து இலங்கைத் தமிழர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காதலரின் பெயர் துஸ்ரா சந்தனா, பெண்ணின் பெயர் சாருகா தில்கானி எனத் தெரிய வந்தது.
இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள். கடுவத்தை பகுதியில், வசித்து வந்தவர் சாருகா. துஸ்ரா, கொழும்பில் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிக்கவும் முயன்றுள்ளனர். இதையடுத்து தமிழர்கள் வசிக்கும் வவுனியா பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். கிட்டத்தட்ட 7 மாதங்கள் அங்கு வசித்துள்ளனர்.
ஆனால் அங்கு ராணுவ கெடுபிடி ஜாஸ்தியாக இருந்ததால், தமிழகத்திற்கு அகதிகளாக செல்லும் தமிழர்களோடு இணைந்து தாங்களும் தமிழகம் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி 19 தமிழர்களுடன் இணைந்து தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.
இருவரையும் தமிழ் அகதிகள் பட்டியலில் சேர்க்க முடியாது என்பதால் இவர்களை அகதிகளாக போலீஸார் பதிவு செய்யவில்லை. மாறாக,இருவரும் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் வந்துள்ளதால் அவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
தமிழ் அகதிகளுடன் இணைந்து சிங்கள காதல் ஜோடி ஒன்று அகதிகளாக வந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications