போலியோ பீதி: மக்கள் போராட்டம்-டாக்டர்கள், நர்ஸ்கள் ஸ்டிரைக்
திருப்பூர்: போலியோ சொட்டு மருந்து பீதியால் பொதுமக்கள் மருத்துவமனைகளை தாக்கியதால் கோபமடைந்த திருப்பூர் மாவட்ட மருத்துவமனை டாக்டர்களும், நர்சுகளும் இன்று ஸ்டிரைக் செய்தனர்.
போலியோ மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் இறந்ததாக பரவிய வதந்தியால் தமிழகத்தில் நேற்று ஏற்பட்ட பதட்டம் இன்றும் தணியவில்லை.
நேற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள் டாக்டரைத் தாக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று அங்கு டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கோரி இன்று காலை வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
சென்னையில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால் மயக்கம் அடைந்த 259 குழந்தைகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 129 பேர் ஆண் குழந்தைகள். 130 பேர் பெண் குழந்தைகள்
சிகிச்சைக்கு பிறகு உடல் நிலை சீரானது. 224 குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து சென்றனர். இன்னும் 35 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தர்மபுரியை அடுத்த புலிக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சிவசங்கரிக்கு 5 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று காலை கடகத்தூரில் உள்ள அங்கன் வாடி மையத்தில் அந்த குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மாலையில் குழந்தை சோர்வாக காணப்பட்டது. இரவு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந் தையை சேர்த்தனர். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து போனது.
போலியோ சொட்டு மருந்து காரணமாக குழந்தை இறந்ததாக சிவசங்கரியும், உறவினர்களும் தெரிவித்தனர். ஆனால் குழந்தை போலியோ சொட்டு மருந்தால் இறக்கவில்லை பால் புரை ஏறியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அய்யனார் கூறினார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவழஞ்சுழி, பெரம்பலூர் எசனை ஆகிய கிராமங்களில் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொண்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டையை அடுத்துள்ள பேட்டையை சேர்ந்த சபரிமுத்துவின் குழந்தை நிக்ச னுக்கு சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. செங்காட்டை சேர்ந்த நாகராஜன் மகன் சதீசுக்கும் வாந்தி -மயக்கம் ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராஜாமணி மகள் வத்சலாவிற்கு (3) போலியோ சொட்டு மருந்து போடப்பட்டபிறகு திடீரென வாந்தி-பேதி ஏற்பட்டது. அக்குழந்தையை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தனர். இதே போல் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து குறித்த பீதி கிளம்பியது.
குன்னத்தூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மருத்து வமனைகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க சென்றனர். டாக்டர் சிகிச்சை அளிக்க மாட்டேன் என்றதால் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார மக்கள் குழந்தைகளுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் திரண்டனர். டாக்டர்கள் இல்லாததால் கேட்டை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடு பட்டனர்.
தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் பலரும் ஆவேசம் அடைந்தனர். சிலர் மருத்துவமனை கண்ணாடியை சேதப்படுத்தினர்.
குன்னூர் காந்திபுரம் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு ஒரு குழந்தை இறந்தததாக வதந்தி பரவியது. இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிவந்தனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, காளியாபுரம், ஓடையகுளம் உள்ளிட்ட கிராம மக்கள் வேட்டைக் காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தை களுடன் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லை என கூறி விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கணேஷ் என்பவரது கார் மீது கல்வீ சப்பட்டது. கொங்கு வேளாளர் பேரவையினர் கணேசுக்கு ஆதரவாக திரண்டனர். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்கி கொண்டனர். தொழி லாளர்கள் சங்க அலுவலக கொட்டகை தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக 127 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications