பிப்ரவரியில் திமுகவில் இணையும் போட்டி மதிமுக
திருவாரூர்: தங்களது தலைமையிலான மதிமுக வரும் பிப்ரவரி மாதம் போட்டி திமுகவில் இணையும் என்று எல்.கணேசன் கூறியுள்ளார்.
திருவாரூரில் போட்டி மதிமுகவின் (எல்.ஜி.-செஞ்சி) நாகை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமை தாங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் கணேசன் பேசுகையில்,
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி அடைய உறுதுணையாக நின்று உழைப்போம்.
மதிமுக திருமங்கலம் தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்து கேவலத்திற்குரியது. இது மதிமுகவுக்கு ஒரு கரும்புள்ளி. மதிமுக நின்றால் தோற்றுவிடும் என்று கருதி அதிமுகவிற்கு தொகுதியை விட்டுக் கொடுத்த வைகோவை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். விரைவில் வைகோ கூடாரம் காலியாகும்.
போர் நிறுத்தத்துக்கு இலங்கை முன் வராவிட்டால் ராணுவ உதவிகளை திரும்ப பெறுவதுடன் இந்திய தூதரையும் திரும்ப பெற வேண்டும். ஐ.நா. சபைக்கு பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும்.
வரும் பிப்ரவரி மாதம் எங்கள் கட்சி திமுகவில் இணைகிறது. இதற்கான தேதியை முதல்வர் கருணாநிதி விரைவில் அறிவிப்பார்.
சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. திருமாவளவன் தனது தொண்டர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்பேன். கருணாநிதி நிற்க சொல்லும் தொகுதியில் நிற்பேன். ஏனெனில் கடந்த எம்பி தேர்தலில் மதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது, திருச்சி தொகுதியில் நிற்க உத்தரவிட்டது முதல்வர் கருணாநிதி தான்.
கடந்த சில மாதங்களாகவே போட்டி மதிமுக திமுகவில் இணையும் என்று எல்.ஜி பலமுறை கூறிவிட்டார். ஆனால் இணைப்பு விழா தேதி தான் அறிவித்தபாடு இல்லை. ஒருவேளை முதல்வர் கருணாநிதிக்கு இதில் உடன்பாடு இல்லையோ என்று மதிமுவினர் நையாண்டி செய்து வருகின்றனர்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications