பதவி விலக மாட்டேன்: அந்துலே உறுதி
டெல்லி: மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து அரசு தெளிவுபடுத்தி விட்டது. இதுதொடர்பாக விசாரணை தேவையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் விலக மாட்டேன். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் வந்து எனது காலில் விழட்டும் என்று மத்தி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே கூறியுள்ளார்.
கர்கரே விவகாரம் தொடர்பாக அந்துலே எழுப்பிய சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் லோக்சபாவில் இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், கர்கரேவை கொன்றது தீவிரவாதிகள்தான். இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து லோக்சபா கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த அந்துலேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உள்துறை அமைச்சரின் அறிக்கை அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி விட்டது. சபையில் ஒரு அறிக்கையை உள்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். அதை அனைவரும் நம்ப வேண்டும்.
ப.சிதம்பரம் தெளிவான விளக்கத்தை அளித்து விட்டதால் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை.
என்னைப் பொருத்தவரை விவகாரம் இத்துடன் முடிந்து விட்டது. எனது வேண்டுகோள் என்னவென்றால், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. விசாரணைக்குப் பின்னரே உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
நான் விலகும் பேச்சுக்கே இடமில்லை. அப்படிக் கோரும் எதிர்க்கட்சியினர் எனது காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு கேட்கட்டும். அல்லது பிரதமரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு அந்துலேவை நீக்குங்கள் என்று கூறட்டும்.
கர்கரே மரணம் தொடர்பாக சதி நடந்திருப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை. சந்தேகம் இருப்பதாகத்தான் தெரிவித்திருந்தேன் என்றார் அந்துலே.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications