அரவாணிகள் நலனுக்கு புதிய அமைப்பு

அரவாணிகள் மற்றும் நலிந்த பெண்களுக்கான 'தமிழ்நாடு தாய் விழுதுகள்' என்னும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துவக்க விழாவில் கனிமொழி பேசுகையில்,
பெண்களும், அரவாணிகளும் சமூகத்தின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட இரு துருவங்கள். பெண்களை வீட்டில் பூட்டி வைக்கின்றனர், அரவாணிகளை வீட்டை விட்டு வெளியே துரத்தி, சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இருவரும் ஒற்றுமையாக செயல்பட இந்த அமைப்பு உதவியாய் இருக்கும். அரவாணிகள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படுகின்றன. அவர்கள் மீது பரிவு ஏற்படும் வகையில் அவர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.
அரவாணிகள் நலனுக்காக தமிழக அரசு தனி வாரியம் அமைத்துள்ளது. அவர்கள் கல்வியறிவு பெறவும், மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறவும் சட்டபூர்வ அந்தஸ்தையும் அரசு வழங்கியுள்ளது.
தடைகளைத் தாண்டி அரவாணிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளக் கூடாது.
மற்றவர்களை விட உழைப்பிலும், அறிவிலும் அரவாணிகள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்ல. சமுதாயம் தான் அவர்களுக்குரிய வாய்ப்புகளைத் தராமல் ஒதுக்கி வருகிறது.
அரவாணிகளுக்கு கல்வியறிவு தருவதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications