செங்கோட்டை-புனலூர் ரயிலுக்கு கடும் கூட்டம்

தமிழ்நாடு-கேரள எல்லைபகுதியான செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை எஸ்-வளைவு முதல் புனலூர் வரை மிகவும் மோசமாக சாலைகள் இருந்ததை அடுத்து அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று கடந்த மாதம் 17ம் தேதி முதல் இப்பாதையில் சாலை புதுப்பிக்கும் பணி ரூ.26 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் கோட்டை வாசல் பகுதியில் முழுமையாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி அம்மாநில அரசு சாலையை புதுப்பிக்கும் பணியினை முன்அறிவிப்பின்றி தொடங்கியது.
இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள், ஐயப்ப பக்தர்கள், பயணிகள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.
பின்னர் செங்கோட்டை மேக்கரை வழியாக அச்சன்கோவில், அலிமுக்கு பாதையில் மேற்கண்ட வாகனங்கள் கேரள செல்லத் துவங்கின.
மேலும் ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை, புனலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கனக்காணோர் தமிழகம் வருவதற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ரயில் மூலம் தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர்.
தற்போது செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு காலை 6 மணி, 9 மணி, 11.35 மணி, 3.40 ஆகிய நேரங்களில் 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் கட்டுகடங்காத பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தென்னக ரயில்வே இத்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications