நாளை டி.என்.பி.எஸ்.சி குருப்-1 இன்டர்வியூ
மதுரை: தமிழக அரசின் குரூப் -1 பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நாளை தொடங்குகிறது. ஜனவரி 3ம் தேதி மாலை தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி அதிகாரி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட உயர் பதவிகளில் 172 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ். சி. குரூப்-1 மெயின் தேர்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்தம் 348 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேர்முகத் தேர்வு 26-ம் தேதி (நாளை) தொடங்கி, ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது.
தினமும் காலை 6 பேர், பிற்பகல் 6 பேர் என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத்தேர்வின் கடைசி நாளான 3-ம் தேதி மாலை தேர்வு பெற்றோர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications