முப்படை தளபதிகளுடன் மன்மோகன் சிங் முக்கிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Manmohan singh
டெல்லி: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மன்மோகன் முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளார்.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விமானப்படை தளபதி பாலி மேஜர், ராணுவ தளபதி தீபக் கபூர், கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் தவிர தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் பங்கேற்றார்.

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தை குவித்து வருவது குறித்தும், இந்தியாவின் ஆயத்த நிலை குறித்தும், எத்தகையை சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் படைகள் உள்ளதா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

6 நாட்களுக்கு முன்புதான் அணு ஆயுத ஆணையத்தின் கூட்டத்தை பிரதமர் கூட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். மேலும், ஏற்கனவே முப்படைத் தளபதிகளுடன் அவர் ஒரு சுற்று ஆலோசனையையும் மேற்கொண்டார்.

இன்றுடன் மும்பைத் தாக்குதல் முடிந்து 1 மாதமாகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்திருந்த சில கோரிக்கைகளை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த கெடுவும் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+