படை குவிப்பு: யுஎஸ்ஸை மிரட்டும் பாக்-இந்தியா
டெல்லி: எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து அமெரிக்காவுக்கு நெருக்குதல் ஏற்படுத்தி, இந்தியாவின் தாக்குதலை தவிர்க்க நினைக்கிறது பாகிஸ்தான் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க, படைகளைக் குவித்து அமெரிக்காவை மிரட்டும் தந்திரத்தில் ஈடுபட்டுள்ளது பாகிஸ்தான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகளைக் குவித்து வருவது குறித்து இந்திய ராணுவ வட்டாரத்தில் கூறுகையில், இதைப் பற்றி இந்தியா கவலையே படவில்லை. மக்களிடையே பீதியை ஏற்படுத்தவும், அமெரிக்காவை மறைமுகமாக மிரட்டி நெருக்குதல் தந்து, இந்தியா தாக்கி விடாமல் தடுக்க வைக்கவும்தான் இவ்வாறு நடந்து கொள்கிறது பாகிஸ்தான்.
அல் கொய்தா எதிரான சண்டையி்ல் ஈடுபட்டிருக்கும் தனது படைகளை முழுமையாக விலக்கிக் கொண்டால், அமெரிக்கா யோசிக்கும், இந்தியாவை தாக்குதல் நடத்த விடாமல் தடுக்கும் என்பதுதான் பாகிஸ்தானின் தந்திரம்.
இந்திய ராணுவத்தின் மேற்கு, தென் மேற்கு மற்றும் வடக்கு கமாண்டுகள் முழு ஆயத்த நிலையிலும், உஷார் நிலையிலும் உள்ளன. இருப்பினும் உச்சகட்ட உஷார் நிலையில் அவை வைக்கப்படவில்லை. அதற்கான அவசியம் எழவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தின் லத்தி, மகாஜன், பொக்ரான் ரேஞ்சுகளில் ஆண்டுதோறும் குளிர்காலத்தின்போது டாங்குகள், படைகளைக் கொண்டு பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதுபோலவேதான் தற்போதும் நடந்து வருகிறது. இதில் விசேஷம் இல்லை என்று ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications