ஆற்காடு முதன்மை செயலாளர்-துரைமுருகன், சற்குணபாண்டியன், பரிதி துணை பொது செயலாளர்கள்
சென்னை: திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் 13வது பொதுக்குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதலில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்வு நடந்தது.
இந்தத் தேர்வு முடிந்ததும், தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் முதல்வர் கருணாநிதி பேசினார்.
அப்போது முதலில் கழக சட்ட விதிகள் சிலவற்றில் திருத்தம் மேற்கொள்ள பொதுக்குழுவின் அனுமதியைக் கோரினார். இதையடுத்து கழக அமைப்புச் செயலாளர் டி.கே.இளங்கோவன் திருத்தம் செய்யப்படவுள்ள விதிகள் குறித்த பட்டியலை வாசித்தார். பின்னர் அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையொலி எழுப்பி ஒப்புதல் அளித்தனர்.
அதன் பின்னர் தணிக்கைக் குழு உறுப்பினர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். மதுரை முன்னாள் மேயர் குழந்தைவேலு, வட சென்னை திமுக முன்னாள் செயலாளர் பலராமன், நெல்லை சுப.சீதாராமன் மற்றும் காசிநாதன் ஆகியோர் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் நியமனத்தை கருணாநிதி அறிவித்தார்.
அதன்படி, இதுவரை பொருளாளராக இருந்து வந்த ஆற்காடு வீராசாமி, கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுவதாக அறிவித்தார். இந்தப் பொறுப்பை இதுவரை துரைமுருகன் வகித்து வந்தார்.
கட்சியின் துணைப் பொதுச் செயாளர்களாக துரைமுருகன், சற்குண பாண்டியன், பரிதி இளம்வழுதி ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் கருணாநிதி அறிவித்தார்.
துணைப் பொதுச் செயலாளராக மு.க.அழகிரி நியமிக்கப்படுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும் அழகிரிக்கு இன்று நடந்த பொதுக்குழுவில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
பின்னர் பொதுக்குழு தீர்மானங்களை மு.க.ஸ்டாலின் வாசிக்கத் தொடங்கினார்.
அழகிரிக்கு பின்னர் பதவி?:
இருப்பினும், கழகத்தின் பிற குழுக்களின் நிர்வாகிகள் நியமனம் குறித்து பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதால், அதில் அழகிரி உள்ளிட்ட சிலருக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications