மும்பை சிறையில் கஸாப்பை அடையாளம் காட்டிய 35 சாட்சிகள்

மும்பை தாக்குதலில் ஈடுபட்டு சிக்கியுள்ள ஒரே தீவிரவாதி அஜ்மல் கஸாப் மட்டுமே. இதனால் பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அவனை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கஸாப் வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது அவனை நேரில் பார்த்த 40 சாட்சிகளை போலீஸார் திரட்டினர்.
அவர்களில் 35 பேர் நேற்று ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் நடந்த அணிவகுப்பின்போது, கஸாப்பை அடையாளம் காட்டினர்.
இதற்காக போலீஸாரின் ரகசிய இடத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் கஸாப், ஆர்தர் சாலை சிறைக்குக் கொண்டு வரப்பட்டான். பின்னர் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறை அதிகாரிகள், போலீஸார் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
போலீஸார் அழைத்து வந்த 35 சாட்சிகளும் கஸாப்பை அடையாளம் காட்டினர்.
அடையாள அணிவகுப்பு முடிந்ததும், கஸாப் மீண்டும் போலீஸாரின் ரகசிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டான்.
அடையாள அணிவகுப்பில் இடம் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் போலீஸ்காரர் அருண் ஜாதவ் மற்றும் தீவிரவாதிகள் தப்ப பயன்படுத்திய ஸ்கோடா காரின் உரிமையாளர் அரஸா ஆகியோர் ஆவர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications