மாலேகான்: கோட்சேவின் தம்பி மகளிடம் ஏடிஎஸ் விசாரணை

தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மரணத்திற்குப் பின்னர் மீண்டும் மாலேகான் வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
மாலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய அபினவ் பாரத் அமைப்பின் தலைவியான ஹிமானி சாவர்க்கரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த அமைப்பின் தலைவராக சவர்க்கர் நியமிக்கப்பட்டார். புனேவில் உள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு வரவழைத்து சாவர்க்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தேவைப்பட்டால் மீண்டும் கூப்பிடுவோம் என்ற நிபந்தனையுடன் அவர் அனுப்பப்பட்டார்.
இந்த வழக்கில் ஏற்கனவே பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித், முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் மற்றும் சுவாமி தயானந்த் பாண்டே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவருக்கும் அபினவ் பாரத் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஹிமானி சாவர்க்கரை அழைத்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள அனைவரின் வக்கீல் செலவுகளுக்கான நிதியை சேகரிக்கும் முயற்சியி்ல் தற்போது ஹிமானி தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்சேவின் தம்பி மகள்:
ஹிமானி சவர்க்கர் வேறு யாருமல்ல, மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சேவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மகாசபாவின் நிறுவனரான சாவர்க்கரின் (வீர சாவர்க்கர்) உறவினரைத்தான் இவர் திருமணம் செய்துள்ளார்.
ஹிமானியிடம் நடந்த விசாரணையின்போது அவரது அமைப்பின் நோக்கம், அந்த அமைப்பின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், இங்கிலாந்து காலத்து கல்வி அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்காகவும் தங்களது அமைப்பு பாடுபட்டு வருவதாக ஹிமானி தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும், மாலேகான் குண்டுவெடி்பு வழக்கில் தனக்கோ அல்லது அதில் கைதாகியுள்ளவர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்றும் ஹினிமா கூறியுள்ளார். தனது அமைப்புக்கு வன்முறையின் மீது நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications