டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான-ரயில் போக்குவரத்து பாதிப்பு

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனி நிலவுகிறது. பனிக்கும், கடும் குளிருக்கும் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் ரயில் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் வர வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தன. அதே நிலைதான் ரயில்களுக்கும்.
மும்பை - டெல்லி, ஹவுரா - புது டெல்லி, ராஜேந்திரா நகர் - புதுடெல்லி, புவனேஸ்வரம் - புது டெல்லி ராஜதானி ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
டெல்லியை நெருங்கிய பல ரயில்கள், உள்ளே வர முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
அதேபோல நீண்ட தூர ரயில்களும் பல மணி நேரம் தாமதமாக வந்து கொண்டுள்ளன. அனைத்து ரயில்களும் குறைந்தது 3 முதல் அதிகபட்சம் 5 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
டெல்லி நகர சாலைகளும் கூட பனி மூட்டத்தால் ஸ்தம்பித்துப் போய்க் கிடந்தன. எதிரில் வருவோர் கூட தெரியாத அளவுக்கு பனி நிலவியதால் சாலைப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அகமது, டெல்லிக்கு விமானம் கிடைக்காததால் சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் தவிக்க நேரிட்டது.
இன்று காலை 8.50 மணிக்கு கோழிக்கோட்டிலிருந்து அவர் சென்னை வந்தார். டெல்லியில் பனி மூட்டம் காரணமாக விமானங்கள் வராததால் டெல்லி செல்ல முடியாமல் சுமார் 5 மணி நேரம் சென்னை விமான நிலையத்திலேயே தவிக்க நேரிட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications