தூத்துக்குடியில் துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கள்ளத் துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் சிலர் ரகசியமாக துப்பாக்கிகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கிருஷ்ணாபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள கருப்பட்டி சொசைட்டி அருகே பதுங்கியிருந்த வாலிபரை கைது செய்து ஒரு துப்பாக்கியை கைப்பற்றினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்த முத்துசாமியின் மகன் சரவணக்குமார் என்பதும், தற்போது அவர் சென்னையிலுள்ள வண்டலூரில் உள்ள லாரி செட்டில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
சரவணக்குமார் கொடுத்த தகவலின் பேரில் முத்துகிருஷ்ணபுரத்தில் லாரி ஷெட் வைத்துள்ள வடிவேல் மகன் மாயாண்டி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கைதுப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற இந்திரா நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் பழனிகுமார், கேவிகே நகரை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் மணிமாறன் ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 5 நவீன ரக கை தூப்பாக்கிகளையும் 9மிமீ தோட்டாக்கள் 33ஐயும் பறிமுதல் செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications