தூத்துக்குடி விஐபிக்களுக்கு கள்ளத்துப்பாக்கி சப்ளை!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிடிபட்ட நவீன கைத்துப்பாக்கிகள் நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்றும் கைதான கும்பல் மூலம் ஏற்கனவே இங்குள்ள விஐபிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் திருட்டுத்தனமாக துப்பாக்கி விற்கும் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 வெளிமாநில துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் கைப்பற்றினர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் துப்பாக்கி விற்கும் தலைவனாக செல்வம் ஈடுபட்டுள்ளான். அவனுக்கு உதவியாக தூத்துக்குடியை சேர்ந்த நிர்மலா என்ற இளம்பெண் இருந்துள்ளார்.
நி்ர்மலாவும், செல்வமும் நேபாளத்தில் இருந்து தனிதனியாக இத்துப்பாக்கிகளை சென்னைக்கு கடத்தி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். செல்வம் மீது தூத்துக்குடி, சென்னை போலீசில் பல வழக்குகள் உள்ளன.
துப்பாக்கிகளை தூத்துக்குடியில் உள்ள முக்கிய விஐபிக்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு இக்கும்பல் பதுக்கி வைத்திருந்துள்ளது.
மேலும் இக்கும்பல் ஏற்கனவே தூத்துக்குடியில் உள்ள சில முக்கிய விஜபிக்களுக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் துப்பாக்கி வாங்கிய விஐபிக்களின் பட்டியலை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications