ராமராஜன் கார் தாக்குதல்-30 திமுகவினர் மீது வழக்கு
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்யச் சென்ற நடிகர் ராமராஜனின் கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் 30 'அடையாளம் தெரியாத' திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடக்கோவில் பகுதியில் அவர் பிரசாரம் செய்துவிட்டு வந்தபோது அவரது காரை திமுகவினர் வழி மறித்து கல்வீசித் தாக்கினர். அவரது காரை பின்தொடர்ந்து வந்த அதிமுகவினரின் கார்களும் கல்வீ்ச்சில் சிக்கின.
இதில் மருங்காபுரியைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற அதிமுக தொண்டர் படுகாயமடைந்தார். இதையடுத்து காரை நிறுத்திய அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்து அவரை வைத்திருந்த ரூ.40,000, அணிந்திருந்த தங்க செயின், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக அவர் கூடக்கோவில் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில் திமுகவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 30 பேர் தன்னை தாக்கியாதக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து புகாரை பதிவு செய்த போலீசார் 'அடையாளம் தெரியாத' அந்த 30 திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு போஸ்டரால் பரபரப்பு:
இதற்கிடையே தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் முளைத்துள்ளன.
பயோனியர் காலனி என்ற இடத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஏராளமான மனு செய்தும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம்- இப்படிக்கு திருமங்கலம் நகர் நல விழிப்புணர்வு சங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் தொழிலாளர் பாதுகாப்பு பேரவை மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு என்று கூறப்பட்டுள்ளது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications