பூரண மது விலக்கு தேவை: ராமதாஸ்
அரியலூர்: பொங்கல் திருநாள் முதல் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் காமராஜர் திடலில் பாமக மகளிரணி சார்பில் மதுஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது விற்பனை மூலம் ரூ.10 கோடி வருமானம் கிடைக்கிறது என்கிறார்கள். அதற்கு பதிலாக ரூ.15 கோடி வருமானம் கிடைக்கக் கூடிய பல நல்ல திட்டங்களை பாமக அவர்களிடம் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். தமிழக முதல்வரும், மதுக்கடையின் வேலை நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தும், புதிய கடைகள் திறப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
இது ஒட்டகத்தின் மீது உள்ள சுமையில் ஒரு சிறு துரும்பை எடுத்து கீழே போட்டது போன்றதாகும்.
பொங்கல் திருநாள் முதல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும் என்றார்.
இதில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி கரு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், மது குடித்து இறந்தவர்களின் மனைவிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் மறுவாழ்வு நிதி வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications