அதிமுவினரின் 'மார்னிங் டூட்டி'- காலை வாரும் எஸ்வி சேகர்
சென்னை: திருமங்கலம் தொகுதியில் ஜெயலலிதா இன்று முதல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து இன்று பெருங்குடி, கைத்தறி நகர், நிலையூர், சம்பகுளம், வளையங்குளம், எலியார்பத்தி, பாரபத்தி, கூடக்கோவில், சின்ன உலகாணி, பெரிய உலகாணி, மைக்குடி, கீழக்கோட்டை, நடுக்கோட்டை, மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கரிசல்காலாம்பட்டி, சுவாமி மல்லம்பட்டி, செங்கப்படை, கட்ராம்பட்டி, ஆலம்பட்டி ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாளை புளியங்குளம், செக்காணூரணி, சிக்கம்பட்டி, அனுப்பப்பட்டி காலனி, கரடிக்கல், கீழ உரப்பனூர், பள்ளக்காபட்டி, மேல உரப்பனூர், சித்தாலை, புங்கங்குளம், அழகுச்சிறை, வாகைக்குளம், சின்ன வாகைக்குளம், காண்டை, உசிலம்பட்டி மெயின் ரோடு, பண்ணிக்குண்டு, சாத்தங்குடி, கண்டுகுளம் ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வார்.
5ம் தேதி கூத்தியார்குண்டு, சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, லாலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, கே.வெள்ளாகுளம், விருதுநகர் மெயின் ரோடு, மேலப்பட்டி, சென்னம்பட்டி, குராயூர், நொச்சிக்குளம், மருதக்குடி, வேப்பங்குளம், இலுப்பங்குளம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
6ம் தேதி திருமங்கலம் முத்துராமலிங்க தேவர் சிலை அருகில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
திமுக வெல்வதே நல்லது-எஸ்.வி.சேகர்:
திருமங்கலம் இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய தன்னை கட்சி அழைக்கவில்லை என அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறினார்.
மதுரை வந்த அவர் கூறுகையில், நான் இப்போதும் அதிமுக எம்எல்ஏ தான். மதுரை வரும் வழியில் திருமங்கலம் தொகுதியில் சிலரிடம் விசாரித்த போது, கடந்த முறை மதிமுக வெற்றிபெற்று எதிர்கட்சியாக இருந்ததால் தொகுதிக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மறுபடியும் கூட்டணியில் உள்ள அதிமுக போட்டியிடுகிறது. மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சி வெற்றி பெற்றால் தான் எளிதாக அரசின் திட்டங்களை பெற முடியும் என தெரிவித்தனர்.
மக்கள் புத்திசாலிகளாக உள்ளனர். பொதுவாக இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். இந்த இடைத்தேர்தலில் மைலாப்பூர் எம்எல்ஏ என்ற முறையில் என்னை பயன்படுத்த வேண்டியது கட்சியின் கடமை. ஆனால் பிரச்சாரத்திற்கு அழைப்பு வரவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி மேற் கொண்டுள்ளேன். 15 கடிதங்கள் அனுப்பிவிட்டேன். திடீரென அழைத்து பேசினாலும் பேசலாம். திருமங்கலம் தொகுதியில் யார் அதிக ஓட்டு பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி தான் என்றார் சேகர்.
அதிமுகவுக்கு முத்தரையர் சங்கம் ஆதரவு:
இந் நிலையில் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு முத்தரையர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தினம் ஒரு மனு-அதிமுவினரின் காலை 'டூட்டி':
இதற்கிடையே டெல்லி, மதுரையில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் தினமும் காலையில் வந்து புகார் கொடுப்பதை அதிமுகவினர் ஒரு வழக்கமாகவே ஆக்கிக் கொண்டுள்ளனர்.
இன்றும் வழக்கம்போல திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளரான பிரகாஷிடம் புகார் மனு கொடுக்க மாஜி சபா பி.எச்.பாண்டியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், பொன்னையன், மதுசூதனன் ஆகியோர் வந்தனர்.
காலை டிபனை முடித்துவிட்டு, அடுத்த வேலையாக வழக்கம் போல மதுரையில் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த பிரகாஷிடம் புகார் மனு தர வந்தனர்.
இவர்களுக்கு இதே வேலையாகிப் போனதால் அவர்களை கண்டுகொள்ளாமல் தனது முக்கியமான தேர்தல் பணிகளை கவனிக்க திருமங்கலத்துக்கு புறப்பட்டார் பிரகாஷ்.
ஆனாலும் மனம் தளராத அதிமுகவினர் தேர்தல் அதிகாரியை தங்களது கார்களில் விரட்டிச் சென்றனர். திருமங்கலம் வரை போயாவது மனுவைத் தந்துவிடுவது என அவரை விரட்டிச் சென்றனர்.
வழக்கம்போல் 'இன்றைய மனுவை' தராவிட்டால் அவரிடம் தராவிட்டால் போயஸ் கார்டனிலிருந்து டோஸ் வருமே, அதனால் தான் இப்படி ஓடினர் அதிமுகவினர் என்று சொல்லி சிரிக்கின்றனர் திமுகவினர்.
ஜெவுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் அதிமுக:
இதற்கிடையே திருமங்கலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தமிழக டிஜிபி கே.பி.ஜெயினிடம் அதிமுகவினர் மனு அளித்தனர்.
இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய இன்று திருமங்கலம் வந்த ஜெயினை அதிமுக சார்பில் பி.எச்.பாண்டியன், பொன்னையன், தளவாய்சுந்தரம் ஆகியோர் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications