கொழும்பில் மீண்டும் குண்டுவெடிப்பு - 3 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சியைப் பிடித்த சந்தோஷத்தில் கொழும்பு, விமானப்பட தலைமையகத்தில் கொண்டாட்டத்தில் வீரர்கள் இருந்தபோது, வெளியே மனித வெடிகுண்டுத் தாக்குதலை புலிகள் நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று முல்லைத்தீவில் ராணுவம் கடும் தாக்குதலை தொடுத்த நிலையில், கொழும்பில் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
பேட்டை, செஞ்சதுக்கம் பகுதியில், வேனில் வைக்கப்பட்டிருந்த குண்டு நேற்று மாலை 5 மணியளவில் வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications