குணமடைந்தார் வீரபாண்டி ஆறுமுகம் - பணியைத் தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் சரியாகி மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் வேளாண்மைத் துறையை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கவனித்து வந்தார். தற்போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குணமடைந்து விட்டதால், நேற்று முற்பகலிலிருந்து அவர் தனது அலுவகப் பணியைத் தொடங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications