வாக்காளர்களுக்கு செல்போன் கொடுக்கிறார்கள்-விஜயகாந்த்

திருமங்கலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று 3-வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் செக்கானூரணி, புளியங்குளம், கொக்குளம், தேங்கல்பட்டி, சிக்கம்பட்டி, கரடிக்கல் உள்பட பல்வேறு கிராமங்களில் தனபாண்டியனுக்கு ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில், கட்சி ஆரம்பிப்பது மடம் அமைத்து, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாடுவதற்கா?', இல்லை. ஆட்சியை பிடித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்குத்தான் நாங்களும் கட்சி ஆரம்பித்துள்ளோம்.
தைரியம் இருந்தால் என்னை மாதிரி கூட்டணியின்றி தனித்து போட்டியிடுங்கள். பார்ப்போம்.
திமுகவின் பின்னால் ரயில் பெட்டிகளை போல் 10 கட்சிகள் கூட்டணி உள்ளது என்று கூறினார்கள். ஆனால் தற்போது காங்கிரஸ் எனும் ஒரே பெட்டிதான் அவர்களுடன் கூட்டணியாக உள்ளது.
சேலை தருகிறார்கள்:
பொதுமக்களுக்கு பணம் கொடுத்து எனது பிரசாரத்துக்கு வரவிடாமல் சில கட்சியினர் தடுக்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களை விலைக்கு வாங்க முடியாது. கள்ளிக்குடியிலும் கூட மக்களை வரவிடாமல் தடுத்தனர். தற்போது திருமங்கலத்தில் சில கட்சியினர் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை கொடுக்கிறார்கள்.
செல்போன் தருகிறார்கள்:
செல்போன் வழங்குகிறார்கள். தோல்வி பயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடுகின்றனர்.
தேர்தலுக்காக கோடி, கோடியாக செலவழிப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்கி வந்தால் விலைவாசி ஏற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால் அதை விடுத்துவிட்டு காசுகளை கொட்டி வாக்காளர்களை
விலைக்கு வாங்கி வருகிறார்கள்.
காசு வாங்கி ஓட்டுப்போட்டீர்கள் என்றால் உங்கள் ஊருக்கான அடிப்படை வசதிகளை கேட்டுச்செல்லும்போது, நீங்கள் காசு வாங்கிக்கொண்டுதானே ஓட்டுப்போட்டீர்கள்' என தட்டிக்கழித்து விடுவார்கள். எனவே நீங்கள் நல்ல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications