காமராஜரை வென்ற விருதுநகர் பெ.சீனிவாசன் மரணம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று பிரபலமான முன்னாள் சபாநாயகர் பெ.சீனிவாசன் மரணமடைந்தார்.

விருதுநகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பெ. சீனிவாசன் திங்களன்று காலை காலமானார். அவருக்கு வயது 72.

1967ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் அன்றைய முதல்வர் காமராஜரை எதிர்த்து திமுக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

இதையடுத்து 1989ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு நடிகை ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பனை தோற்கடித்தார்.

துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ள சீனிவாசன் சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். தலைமைக் கழக பேச்சாளராக விளங்கினார்.

அவரது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்அருகில் உள்ள அப்பைய நாக்கன் பட்டி. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று சீனிவாசன் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை அப்பைய நாயக்கன் பட்டியில் நடைபெறுகிறது.

சீனிவாசன் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+