வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்-தா.பா
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தலி் ஆளுங்கட்சியினர் தோல்வி பயணம் காரணமாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட காத்திருக்கின்றனர். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதிலும் கைதேர்ந்தவர்கள் என்று சர்க்காரியா கமிஷனால் அடையாளம் காட்டப் பட்டவர்கள், இப்போது விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட் டுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறை கேடு செய்ய நினைக்கிறார்கள்.
எந்த பொத்தானை அழுத்தினாலும் ஆளுங்கட்சிக்கு வாக்குகள் விழும் வகையில் எந்திரம் அமைக் கப்பட்டுள்ளதாக அறிகி றோம். இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளோம்.
எங் கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதி. இதனால் தோல்வி பயம் காரணமாக இத்திட்டத்தை ஆளுங் கட்சியினர் செய்ய உள்ளனர். ஆகவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications