பாக். மீது இஸ்ரேல் பாணி தாக்குதல் இல்லை-பிரணாப்
டெல்லி: இஸ்ரேல் செய்வது போன்று பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுக்காது. இஸ்ரேல் விவகாரத்தையும், இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் முகர்ஜி அளித்துள்ள பேட்டியில், இஸ்ரேல் பாணி தாக்குதலை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதற்கும், இந்தியாவின் நிலைக்கும் சம்பந்தம் இல்லை. அது வேறு, இது வேறு.
இருப்பினும் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு முடிவு கட்டுமா, இந்தியாவின் கோரி்க்கையை அது நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்து எதிர்கால நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளது. அதேபோல பாகிஸ்தான் நிலப்பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஒருபோதும் இந்தியாவிடம் இருந்ததில்லை. அப்படி இருக்கையில் இஸ்ரேலைப் போன்று இந்தியாவும் தாக்குதல் நடத்தும் என எப்படி எதிர்பார்க்கலாம்?
அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவின் பரிசீலனையில் உள்ளன. அதேசமயம் ஆப்ஷன் ஏ, ஆப்ஷன் பி என பிரித்துக் கூற முடியாது. அனைத்து வாய்ப்புகளும் நம் முன் உள்ளன. அவ்வளவுதான் கூற முடியும்.
மும்பைத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். அதற்கேற்ப அது செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
பாகிஸ்தான் நம்மிடம் என்ன கேட்டதோ அதை நாம் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இனி அதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவேளை அவர்கள் உரிய முறையில் செயல்படாவிட்டால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வருங்காலம் தீர்மானிக்கும் என்றார் பிரணாப்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications