சத்யம் கீழ் இயங்கும் 8 நிறுவனங்களிலும் விசாரணை - அமைச்சர்
புதுடெல்லி: சத்யம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 8 நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் கணக்கு வழக்குகளை கம்பெனி சட்டப்படி மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா கூறியுள்ளார்.
சத்யம் விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்க பிரதமரைச் சந்திக்கச் செல்லும் முன் பிசி குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த வழக்கில் எந்தவித பாரபட்சமும் இருக்காது. சத்யம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு வழக்கு விபரங்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றை சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து நமது புலனாய்வு ஏஜென்ஸிகள் கைப்பற்றும்.
குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிட மாட்டோம். அரசியல் குறுக்கீடுகளையும் அனுமதிக்க மாட்டோம். இன்னும் 7 நாட்களுக்குள் புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டு, முதல்கூட்டமும் நடந்துவிடும்.
சத்யம் நிறுவன ஆடிட்டர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம். சார்டட் அக்கவுண்டன்ட் அமைப்பிலிருந்தே அவர்கள் நீக்கப்படுவார்கள்.
சத்யம் நிறுவனத்தின் கீழ் 8 நிறுவனங்கள் உள்ளன. இப்போது இவற்றின் கணக்குகள் மற்றும் நிர்வாகம் குறித்தும் விசாரிக்கப்படும்.
சத்யம் மோசடிக்காக இந்திய சாப்ட்வேர் துறையை பலி கொடுக்க முடியாது என்றார் குப்தா.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications