லஷ்கர் நிறுவனர் சயீத்தின் வீட்டுக் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் முகம்மது சயீத்தின் வீட்டுக் காவலை பாகிஸ்தான் அரசு நீட்டித்துள்ளது.
லஷ்கர் அமைப்பின் முகமூடியான ஜமாத் உத் தவா அமைப்புக்கு கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. ஹபீஸ் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர்.
அவரை ஒரு மாதம் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவரது காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நெருக்கடிகள் அதிகரித்து வருவதால் ஹபீஸை இப்போதைக்கு சுதந்திரமாக விட வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications