அதிமுக எம்.எல்.ஏ சாமி, 52 பேருக்கு ஜாமீன்
மதுரை: மேலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சாமி உள்ளிட்ட 53 பேருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீன் வழங்கியது.
திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு வந்த நடிகர் ராமராஜனின் கார் உள்ளிட்ட அதிமுகவினரின் காரை திமுகவினர் தாக்கியது தொடர்பாக விசாரிக்க சாமி உள்ளிட்ட அதிமுகவினர் விரைந்தனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரின் கார்களையும் சோதனையிட்டனர். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அப்போது போலீஸாரின் வாகனங்களைத் தாக்கியதாகவும், அரசு ஊழியர்கள் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி சாமி உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் ஜாமீன் கோரி உள்ளூர் கோர்ட்டில் மனு செய்தனர். ஆனால் அங்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சாமி உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications