முல்லைத் தீவில் ராணுவம் தாக்குதல்
கொழும்பு: முல்லைத் தீவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளன இலங்கை படைகள்.
ஹெலிகாப்டர் கன்ஷிப்கள், போர் விமானங்கள், முல்லைத்தீவில் உள்ள பல முக்கிய நிலைகளை குறி வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சிக்கு தெற்கே உள்ள இரணமடு என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் இரு முக்கிய நிலைகளை குறி வைத்து வி்மானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளன.
இவை விடுதலைப் புலிகள் ஒன்று கூடி திட்டமிடும் இடங்கள் ஆகும். எம்.ஐ.- 24 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானஹ்களைக் கொண்டு இரணமடு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிளிநொச்சி, ஆனையிரவு ஆகிய முக்கியப் பகுதிகளை ராணுவத்திடம் இழந்துள்ள விடுதலைப் புலிகள் தற்போது முல்லைத் தீவோடு சுருங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முல்லைத் தீவையும் பிடிக்கும் நோக்கில் இலங்கைப் படைகள் தீவிரத் தாக்குதலை தொடுத்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ் எம்.பி. கோரிக்கை:
இதற்கிடையே, ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசின் செயலை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் எம்.பி சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ முதல்வரையும், மத்திய அரசையும் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எங்களைக் காப்பாற்றுங்கள். இனப்படுகொலையிலிருந்து தமிழ் இனத்தைக் காப்பாற்ற உதவுங்கள். போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக உயிரிழப்பார்கள். கண்டிப்பாக அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பே இல்லை. எனேவ சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுக்கு வருமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications