கந்து வட்டி-தாய், மகள் தற்கொலைக்கு முயற்சி
நெல்லை: கந்து வட்டிக் கொடுமையால், நெல்லையைச் சேர்ந்த பெண்ணும், அவரது மகளும் தற்கொலைக்கு முயன்றனர்.
நெல்லை டவுன் வடம்போக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓர்க் ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 3 மகளகள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி மும்பை மற்றும் சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
கடைசி மகள் ஜெயந்தி. ஊனமுற்ற இவர் பெற்றொருடன் வசித்து வருகிறார். நேற்றிரவு ராஜேந்திரன் வழக்கம்போல் ஓர்க் ஷாப்பில் இரவு தங்கி விட்டு காலை வீடு திரும்பினார்.
அங்கு மனைவி ரேவதி, மகள் ஜெயந்தி ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களின் அருகில் விஷப்பாட்டில் கிடந்தது. இதைபார்த்த ராஜேந்திரன் ஆதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய், மகள் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராஜேந்திரன் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.1500 கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை திரும்ப கொடுக்க முடியாததால் அவர் தங்களது வீட்டிற்கு வந்து இருவரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
லாரி ஷெட் அதிபர் வெட்டிக் கொலை:
தென்காசி கூலக்கடை பஜாரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் மகன் முத்துகிருஷ்ணன். இவர் நடுபல்க் அருகே லாரி ஷெட் வைத்துள்ளார்.
இவரிடம் தென்காசி எல்ஆர்எஸ் பாளையத்தை சேர்ந்த குருசாமி மகன் ராஜா என்பவர் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு முத்து கிருஷ்ணன் ராஜாவுக்கு ரூ.2 ஆயிரம் வேறு நபரிடம் கடனாக வாங்கி கொடுத்தார். அந்த பணத்தை ராஜா திருப்பி கொடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் முத்துகிருஷ்ணன், ராஜா வீட்டிற்கு சென்று கடனை திரும்ப கேட்டுள்ளார். ராஜா பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா அரிவாளால் முத்துகிருஷ்ணனை சராமரியாக வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications