என்.ஐ.ஏ இயக்குநராக ராதா வினோத் ராஜு நியமனம்

அமெரிக்காவின் எப்.பி.ஐ போல, இந்தியாவில் புதிதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி உருவாக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குற்றங்களை இது விசாரிக்கும்.
இந்த ஏஜென்சியின் முதலாவது இயக்குநர் ஜெனரலாக ராதா வினோத் ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
59 வயதாகும் ராஜு, தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வருகிறார். 1975ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ்.அதிகாரி ஆவார்.
ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார்.
2010ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வரை தேசிய புலனாய்வு ஏஜென்சியின் இயக்குநராக அவர் பணியாற்றுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்தவர் ...
சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் ராஜூ.
சிபிஐயில் இருந்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்தவர் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜூவின் பெயரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவையின் நியமனக் கமிட்டி கூடி ராஜுவின் நியமனத்தை உறுதி செய்தது.
இந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார் ராஜு. இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவராகியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications