பிரபாகரனை ஒப்படைப்பது குறித்து பரிசீலிப்போம்: இலங்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா கூறுகையில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. இருப்பினும், பிரபாகரனை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா விடுத்துள்ள கோரிக்கை குறித்து இலங்கை சாதகமாக பரிசீலிக்கும்.
பிரபாகரனை கைது செய்த பின்னர் இந்தியாவிடமிருந்து முறைப்படி கோரிக்கை வந்தால் அதை பரிசீலிப்போம். இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் ( ராஜீவ் காந்தி கொலை வழக்கு) அவர் தேடப்படுகிறார் என்பதை நாங்கள் அறிவோம் என்றார் போகல்லகாமா.
ஏற்கனவே பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் மேனனும் இதே கோரிக்கைய விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications