சத்யத்தை மீட்க நிதியுதவிக்கு முன்வரும் நிறுவனங்கள்

புதிய இயக்குநர்கள் நியமனத்தால் சற்று நம்பிக்கை பெற்ற நிதி நிறுவனங்கள் சில, சத்யத்தை நெருக்கடியிலிருந்து மீட்க நிதியுதவி தர முன்வந்திருக்கின்றன.
இதைவிட முக்கியமான செய்தி, சத்யம் நிறுவனத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேண்டிய ரூ.1700 கோடி உடனடியாகக் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியத் துவங்கியிருப்பதுதான்.
சத்யம் இயக்குநர் குழுவுக்கு அரசு மேலும் 3 இயக்குநர்களை நியமித்ததைத் தொடர்ந்து, சத்யம் நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களைத் தேடிப் போவதாக இல்லை என தற்காலிகமாக முடிவெடுத்துள்ளனர். இதுவே அந்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கைவிட்டுப் போகவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட சத்யம் நிறுவன பேங்கர்கள், மீண்டும் கணிசமான முதலீட்டை இறக்கத் தயாராகியுள்ளனர். ஆனால் இது சத்யம் நிறுவனத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் அல்ல. அரசு அளித்துள்ள உறுதியினால்.
இன்னொருபக்கம், சத்யம் நிறுவனத்துக்கு, வரவேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு என்று புதிய இயக்குநர்கள் குழு கணக்குப் பார்க்கத் துவங்கியுள்ளது.
இதுவரை, ரூ.1700 கோடி அந்நிறுவனத்துக்கு வரவேண்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தத் தொகை கூடிய விரைவில் வந்துவிடும் என்றும், இதே போல இன்னும் பலகோடி ரூபாய் பாக்கியிருப்பதாகவும், அதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் இயக்குநர் குழுவின் உறுப்பினர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
'சத்யம் நிறுவனத்துக்கு வரவேண்டியுள்ள தொகை முழுவதுமாகக் கிடைத்தாலே போதும், எந்த நிதியுதவியும் அந்த நிறுவனத்துக்குத் தேவையில்லை. சத்யம் மூடப்பட்ட நிறுவனம் அல்ல. இன்னும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிற நாட்டின் பெரிய ஐடி நிறுவனம். எனவே நிதிப் பிரச்சினை விரைவில் தீரும் என்றே நம்புகிறேன்', என்றார் பரேக்.
'மைனாம்பதி ஓடவில்லை!!'
இந்நிலையில் சத்யம் முன்னாள் இடைக்கால தலைமை நிர்வாகி ராம் மைனாம்பதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுவது குறித்து தீபக் பரேக்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், 'மைனாம்பதியும், சில மூத்த அதிகாரிகளும் வெளிநாடுகளில் உள்ள சத்யம் நிறுவன வாடிக்கையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி அவர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறும் முயற்சியில் உள்ளனர். அவர்களில் பலரும் என்னுடன் பேசிக்கொண்டுதான் உள்ளனர், மைனாம்பதி உள்பட', என்றார் பரேக்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications