ராஜூவுக்கு 'லை டிடெக்டர்' சோதனை?
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ 4 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். அவரிடம் உண்மை கண்டறியும் 'லை டிடெக்டர்' சோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் செபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் முழு அளவில் விசாரிக்க வேண்டுமானால் அவரை தங்களது காவலில் அனுப்ப வேண்டும் என ஆந்திர சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தது. இதையடுத்து இன்று அவரும், அவரது சகோதரரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராம ராஜூ, முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் வட்லாமணி ஆகியோர் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர்.
அதே நேரத்தில், இவர்களை அவர்களது வழக்கறிஞர்கள் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும் என்றும் சிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளும் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லை டிடெக்டர் சோதனை:
இதற்கிடையே ராஜூவிடம் லை டிடெக்டர் சோதனை நடத்தவும் சிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நிறுவனத்தின் ரூ. 7,000 கோடி பணம் எங்கே போனது என்பது குறித்து அவரை கிண்டியெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சத்யம் குழுவில் மேலும் 3 இயக்குனர்கள்:
இதற்கிடையே, சத்யம் நிறுவன போர்டை முற்றிலுமாக கலைத்துவிட்ட மத்திய அரசு கம்பெனிகள் விவகாரத்துறை சார்பாக முதலில் மூன்று இயக்குனர்களை நியமித்தது.
இப்போது மேலும் மூன்று இயக்குனர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
நிறுவனத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த 6 பேர் கொண்ட புதிய போர்ட் முடிவு செய்யும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications