வாஜ்பாய்க்கு எதிராக போட்டியில்லை-சஞ்சய் தத்
லக்னோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எனது தந்தை போன்றவர். லக்னெளவில் அவர் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்து போட்டியிட மாட்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார்.
சஞ்சய் தத் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் லக்னெள தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆயுத வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அவர் போட்டியிட அனுமதி கிடைக்காவிட்டால் அவரது மனைவி மான்யதா நிறுத்தப்படுவார் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் சஞ்சய்தத் நேற்று முதல் முறையாக தொகுதி வேட்பாளராக லக்னெள வந்தார். மனைவி மான்யதா, கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலாளர் அமர்சிங் ஆகியோருடன் வந்த சஞ்சய் தத்துக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அப்போது சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியது, லக்னெள தொகுதி மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள். இது எனது சொந்த ஊர். தேர்தலில் போட்டியிடும்படி அமர்சிங் இட்ட கட்டளையை என்னால் மறுக்க முடியவில்லை.
கடந்த தேர்தலில் வாஜ்பாய் லக்னெளவில் தான் போட்டியிட்டார். அவர் எனது தந்தை போன்றவர். அவரது அனுபவத்துக்கு முன் நான் சிறியவன். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் இங்கு மீண்டும் போட்டியிட்டால் எதிர்த்து நிற்க மாட்டேன்.
எனது தந்தை சுனில் தத் தீவிர காங்கிரஸ்கார். அவரது மரணத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் என்னை தனிமையில் விட்டுவிட்டனர்.
காங்கிரஸை விட்டு பிரிந்தாலும் தேர்தலில் காந்திய முறையை கடைப்பிடிப்பேன். தேர்தலில் போடியிட அனுமதி கிடைக்காவிட்டால், யார் போடியிடுவார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்றார் சஞ்சய் தத்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications