விழுப்புரம் அருகே ஐயப்ப சுவாமி சிலை திருட்டு !
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஐயப்பன் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ளது கா.குப்பம் கிராமம். இங்கு அய்யனார் கோயில் ஒன்றுள்ளது.
நேற்று இரவு பூசைகளை முடித்த கோயில் பூசாரி நடையை சாத்திவிட்டு வீட்டிக்கு சென்றார்.
இன்று காலையில் வழக்கம் போல் கோயிலை திறந்த போது, அங்கு இருந்த ஐயப்பன் சிலை மற்றும் ஈஸ்வரன் சிலைக்கு பக்கத்தில் இருந்த வேல் ஆகியவை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோயில் பூசாரி இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை அமுக்கிக் கொண்டு போன ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications