குமரியில் கடல் சீற்றம்-படகு போக்குவரத்து ரத்து

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் சூறாவளி காற்றும் சுழற்றி அடிக்கிறது.

இதனால் கன்னியாகுமரி பகுதியிலுள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு அச்சத்துடனே சென்று வருவதாக தெரிகிறது. அதில் பலர் கடல் சீற்றம் அதிகமிருப்பதால் உடனே கரைக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடல் சீற்றம் மற்றும் சூறாவளி காற்று காரணமாக விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை காண வந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+