10,000 கோர்ட்டுகள் தேவை-தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்
டெல்லி: கீழ் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள சுமார் மூன்றரை கோடி வழக்குகளுக்கு தீர்வு காண இன்னும் 10 ஆயிரம் கோர்ட்டுகள் தேவை என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகள், ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றில் தினமும் அதிக அளவில் வழக்குகள் பதிவாகி வருகின்றன.
நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு தற்போதுள்ள கோர்ட்களை மட்டும் பயன்படுத்தினால் அனைத்தையும் வழக்குகளுல் முடிவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.
எனவே நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு நாடு முழுவதும் இன்னும் 10 ஆயிரம் கோர்ட்டுகள் துவக்கப்பட வேண்டும் என்கிறார் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,
துணை கோர்ட்டுகளில் 3 கோடியே 58 லட்சம் , சுப்ரீம் கோர்ட்டில் 49 ஆயிரம், மாநில ஐகோர்ட்டுகளில் 36 லட்சம் வழக்குகள் என சுமார் 4 கோடி வழக்குகள் உள்ளன.
ஒரு மாநில ஐகோர்ட்டில் மட்டும் 8 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
வழக்குகளை விசாரிப்பதற்கு மொத்தம் 15 ஆயிரம் துணை கோர்ட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றில் 1,200 கோர்ட்டுகள் சரிவர இயங்குவதில்லை.
வழக்குகள் விரைவில் முடிக்காவிட்டால் சட்டம்-ஒழுங்குகில் பிரச்சினை ஏற்படும். எனவே, வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு இன்னும் 10 ஆயிரம் துணை கோர்ட்டுகள் தேவை.
கோர்ட்டுகளை நவீனமயமாக்க வேண்டும். கணினிமயமாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை விரைவு படுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலமாகவே வழக்குகளை தீர்க்க நாம் முயற்சிக்க வேண்டும்.
இதை எளிதான கருத்தாக சொல்ல முடியாது. எனவே, அதற்கு தகுந்தவாறு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். செக் மோசடி வழக்குகள், பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
சி.பி.ஐ. வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. அதற்கு போதுமான சி.பி.ஐ. கோர்ட்டுகள் இல்லை. 65 புதிய கோர்ட்டுகள் அமைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். டெல்லியில் மட்டும் 4 சி.பி.ஐ. கோர்ட்டுகள் அமைய உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குடும்ப நல கோர்ட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள 465 மாவட்டங்களில் குடும்ப நல கோர்ட்டே இல்லை என்றார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications