ராஜீவை அவமதிப்போர் தமிழர்கள் அல்ல-தங்கபாலு
சென்னை: ராஜீவ் காந்தியை அவமரியாதை செய்யும் யாரும் உண்மையான தமிழர்கள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலையை கொச்சைப்படுத்திய சம்பவத்தை காங்கிரஸ் கட்சி பொறுத்து கொள்ளாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறது.
இந்த செயலை செய்தவர்கள் மீது புதுவை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
ராஜீவ் இந்தியாவின் பிரதமராகவும், இந்திய வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அரும்பாடுபட்டவர். தைரியம் இல்லாத கோழைகள் இரவு நேரத்தில் அவரது சிலையை கொச்சைப்படுத்தியதன் மூலம் எதையும் சாதிக்கப் போவதில்லை. சாதிக்கவும் முடியாது.
இதுபோன்ற செயல்களால் ராஜீவ் புகழை குறைத்துவிட முடியாது. அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் எவரும் உண்மையான தமிழர்கள் அல்ல.
காங்கிரஸ் கட்சி எப்போதும் அறவழியில் இயங்கும் கட்சியாகும். தேவைபட்டால் இதுபோன்ற சம்பவத்தை தடுத்து நிறுத்தவும் தயங்க மாட்டோம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications