பங்குச் சந்தை: ஆரம்பமே அடி!!
மும்பை: அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றும் இன்று, ஆசிய- இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
எடுத்த எடுப்பிலேயே சென்செக்ஸில் 217 புள்ளிகள் அதிரடியாகக் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 67 புள்ளிகளை இழந்து தடுமாறிக் கொண்டுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தை வால் ஸ்ட்ரீட்டுக்கு திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் போக்கை அடிப்படையாக வைத்து வர்த்தகத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் பிரிட்டிஷ் பங்குச் சந்தை கிடுகிடுவென சரிந்துவிட்டதால், ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய அவர்கள் தயங்குவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் (எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க!!).
பிரிட்டனின் ராயல் ஸ்காட்லாந்து வங்கி வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால் (28 பில்லியன் பவு்டுகள்) ஐரோப்பிய மார்க்கெட்டே ஆட்டம் கண்டுள்ளதாம்.
ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் இன்று சரிவில் உள்ளன. ஜப்பானின் நிக்கி 2.5 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. தைவான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் சந்தைகளும் இன்று 3 சதவிகிதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
முற்பகல் 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ்: 9085.43 (-244.14), நிப்டி: 2771.20 (-75.00)
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications