புலிகள் தாக்குதல்: 35 ராணுவத்தினர் பலி-கப்பல் மூழ்கடிப்பு
கொழும்பு: ராணுவத்தின் வசம் உள்ள கிளிநொச்சி மாவட்டம், நெத்தலியாறு பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய ஆவேசத் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர்க காயமடைந்தனர். இப்பகுதியில் ராணுவத்தின் முன்னேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ட்டிலரி உள்ளிட்டவற்றின் துணையுடன் ராணுவம் நடத்திய கடும் தாக்குதலை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த கடும் சண்டையின் இறுதியில் ராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.
மோதலில் 35 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர்.
இதேபோல புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த கடும் சண்டைச் சம்பவங்களில் புலிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம் ஒன்றை ராணுவம் தற்போது கண்டுபிடித்துள்ளது. அது குட்டி விமானம் ஆகும்.
இரணமடு குளத்தின் கிழக்குப் பகுதியில், உள்ள விடுதலைப் புலிகளின் விமான ரன்வேக்கு அருகில் அந்த விமானத்தின் சேதமடைந்த பகுதி காணப்பட்டது.
கடற்படை கப்பல் மூழ்கடிப்பு-புலிகள்:
இதனிடையே இலங்கை கடற்படையின் ஒரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு நடத்திய தாக்குதலில் சூப்பர் துவோரா ரக போர்க் கப்பலை புலிகள் மூழ்கடித்ததாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் 4 படகுகள் அழிப்பு:
இதற்கிடையே முல்லைத் தீவு அருகே விடுதலைப் புலிகளின் 4 படகுகள் அழிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முல்லைத்தீவு கடலோரப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான நான்கு படகுகள் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதை இலங்கை கடற்படையின் போர்க் கப்பல் முறியடித்ததாகவும் நடுக்கடலில் நடைபெற்ற இந்த மோதலில் புலிகளின் 4 படகுகளும் அழிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
இந்த மோதலின் போது விடுதலைப் புலிகள் தற்கொலைப் படையினர் ஒரு படகை வெடிக்கச் செய்ததில் இலங்கை கடற்படையின் போர்க் கப்பல் ஒன்று சேதம் அடைந்தது.
இதனிடையே முல்லைத்தீவு அருகே உள்ள தர்மாபுரம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் புலிகள் வைத்திருந்த 300 பேரல் எரிபொருளை ராணுவத்தினர் பறிமுதல் செய்திருப்பதாக இலங்கை ராணுவ இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications