வரி ஏய்ப்பு: ஜெ. மனு தள்ளுபடி-5 மாதங்களில் விசாரிக்க உத்தரவு!

மேலும் இந்த வழக்கிலிருந்தே தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.
1993-94ம் ஆண்டுக்கான செல்வ வரியை செலுத்ததாக ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித்துறை உதவி ஆணையாளர் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு புகார் செய்தார். இது தொடர்பாக நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் கடந்த ஆண்டே தள்ளுபடி செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் அளித்தபோது அவர்கள் தரப்பில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, இந்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று மேலும் ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்களையும் நீதிபதி மோகன்ராம் விசாரித்து வந்தார்.
இதில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் கொடுத்தபோது அவர்கள் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விவரங்களே போதுமானது என்றும், ஜெயலலிதா சொல்வது போல அதற்கான ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
மேலும் இந்த வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கை 5 மாத காலத்திற்குள் சாட்சிகளை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications