சென்னையில் பரிதவித்த 120 இலங்கை பக்தர்கள்
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு, சென்னை திரும்பி, அங்கிருந்து நாடு திரும்ப வேண்டிய விமானத்தை தவற விட்டு, கொழும்பு செல்ல முடியாமல் சென்னையில் பரிதவிப்புக்குள்ளாகியிருந்த இலங்கையைச் சேர்ந்த 120 பக்தர்களும் இன்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு இருமுடி கட்டி கேரளாவுக்கு சென்றனர். குருசாமி ரவிசாமி என்பவரின் தலைமையில் இந்தத் தமிழ் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டனர்.
ஐயப்ப தரிசனத்தை சிறப்பாக முடித்து விட்டு கடந்த 18ம் தேதி காலை பத்தரை மணி விமானத்தில் கொழும்பு திரும்ப முன்பதிவு செய்திருந்தனர்.
திட்டமிட்டபடி 17ம் தேதி திருச்சி வந்த அவர்கள் அங்கிருந்து பஸ்ஸைப் பிடித்து சென்னை வந்தனர். ஆனால் அன்றைய தினம் விழுப்புரம் பகுதியில், திருமாவளவன் உண்ணாவிரதத்தின் எதிரொலியாக, பெரும் வன்முறை நடந்தது. பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கை பக்தர்கள் வந்த பஸ் தொடர்ந்து செல்ல முடியவில்லை. நள்ளிரவு 2 மணிக்கு விழுப்புரத்துடன் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அவர்களால் சென்னைக்கு வர முடியவில்லை. விமானம் போய் விட்டது.
நேற்று மாலைதான் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர்.
விமானத்தைத் தவற விட்டு விட்டதால் நாடு திரும்ப முடியாமல், விமான நிலையத்திலேயே அனைவரும் தங்கியுள்ளனர். சாப்பிடக் கூட வழியில்லாத அவல நிலையில் 120 தமிழர்களும் இருந்தனர்.
தங்களது நிலை குறித்து ரவிசாமி கூறுகையில், திருமாவளவன் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததால், எங்கள் பஸ்சை விழுப்புரம் மேம்பாலம் அருகே நள்ளிரவு 2 மணியளவில் நிறுத்தி விட்டனர்.
18-ந் தேதி காலை 10.30 மணிக்கு இலங்கை செல்ல வேண்டிய நாங்கள் அங்கேயே இருந்தோம். உடனே இது பற்றி விமான நிறுவனங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தந்து விட்டோம்.
பின்னர் போராட்டம் முடிந்து விட்டதாக கூறி எங்களை அனுப்பினார்கள். நாங்கள் மாலை 5 மணிக்கு தான் வந்து சேர்ந்தோம். எங்களை விமான நிலையத்திற்குள் செல்லக் கூட அனுமதிக்கவில்லை. இது பற்றி இலங்கை தூதரக அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
ஏர் லங்கா விமான நிறுவன அதிகாரிகளிடம் கூறியும் பலன் இல்லை. எங்களில் 7 பேரை மட்டும் அனுப்பினார்கள். 6 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்து இருந்தனர். ஆனால் தற்போது எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படாததால் உணவு மற்றும் ஆதரவின்றி தவிக்கிறோம்.
30-ந் தேதி வரை டிக்கெட் இல்லை என்பதால், அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். எங்கள் யாரிடமும் பணம் இல்லை. குளிக்க, கழிப்பறை செல்லக் கூட இங்கு பணம் கேட்கிறார்கள்.
எங்களது நிலை மிகவும் மோசமாக உள்ளது. குழந்தைகள், வயதான பெண்கள் சிரமப்படுகின்றனர் என்று கூறினார்
இந்த நிலையில் 120 பக்தர்களையும் கொழும்புக்கு அனுப்பி வைக்க ஏர் லங்கா விமான நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இன்று காலை ஏழேகால் மற்றும் பத்தேமுக்கால் மணி விமானங்களில் 120 தமிழர்களும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் தவித்துக் கொண்டிருந்த பரிதாப நிலையிலிருந்து மீண்டு 120 பேரும் சந்தோஷத்துடன் தாயகம் புறப்பட்டுச் சென்றனர்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications