ராஜஸ்தான்-பஞ்சாப் எல்லையில் தளபதி திடீர் ஆய்வு
டெல்லி: ராணுவ தளபதி தீபக் கபூர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். படைகளின் ஆயத்த நிலையை அவர் நேரில் கண்டு ஆய்வு செய்துள்ளார்.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ராணுவம் ஆயத்த நிலையில் இல்லை என்று நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின. இதை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மறுத்திருந்தார். இந்த நிலையில் ராணுவ தளபதியின் திடீர் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து ராணுவ தலைமையக வட்டாரத்தில் கேட்கப்பட்டபோது, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடந்த பிரம்மோஸ் ஏவுகணை சோதனையின்போது ராணுவ தளபதி தீபக் கபூர் அங்கு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பிகானீர், பதிந்தா பிரதேசங்களில் (இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள்) அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பிராந்தியங்களில் ராணுவத்தின் ஆயத்த நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். எதிரிகளின் ஊடுறுவல் மற்றும் அத்துமீறல்களை சமாளிக்கும் வகையில் படையினர் உள்ளனரா என்பதையும் அவர் ஆய்வு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த கடற்படையும், விமானப்படையும் தயாராக உள்ளனவாம். ஆனால் ராணுவ தளபதி தீபக் கபூர் அதற்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார்.
படையினரின் ஆயத்த நிலையில் சில இடைவெளிகள் உள்ளன. எனவே இந்த நிலையில் நாம் தாக்குதல் நடத்துவது உகந்ததாக இருக்காது என அவர் பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அரசு என்ன உத்தரவிட்டாலும் அதை ஏற்று நடத்த ராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications