'பாலு டேப்'-ஒப்படைக்க ஜெயா டிவிக்கு உத்தரவு
டெல்லி: 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பேசிய பேச்சு குறித்த ஒரிஜினல் டேப்களை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய் வேண்டும் என ஜெயா டிவி நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு டி.ஆர்.பாலு பேசுகையில், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பாலு பேசியதாக கூறி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து ஜெயா டிவி செய்தியாளர்கள், கேமராமேனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் டைம்ஸ் நவ் டிவிக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் டைம்ஸ் நவ் டிவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பாலுவின் பேச்சு அடங்கிய டேப் தங்கள் வசம் இல்லை என்று கூறினார். மேலும் ஜெயா டிவியின் வக்கீல், கால அவகாசம் கேட்டிருந்தார்.
கடந்த டிசம்பர் 10ம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இரு டிவி நிறுவனங்களும் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு மீண்டும் வந்தபோது ஜெயா டிவி நிறுவனம் பாலுவின் பேச்சு அடங்கிய ஒரிஜினல் டேப்களை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் 3 வாரங்களுக்குள் டி.ஆர்.பாலு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி மார்ச் 24ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications