ஒபாமாவின் புதிய குடியேற்ற கொள்கை-இந்தியர்களுக்கு லாபம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் புதிய குடியேற்றக் கொள்கை, இந்தியர்களுக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேற விரும்புவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்களுக்குத்தான் அதிக பலன் கிடைக்கும் என கருதப்படுகிறது.
காரணம், அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக குடியேறுவோரில் இந்தியர்கள்தான் சமீப காலமாக அதிக அளவில் உள்ளனர் என்பதே.
புதிய அமெரிக்க அரசின் குடியேற்றக் கொள்கை வரைவுத் திட்டத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், சட்டப்பூர்வமாக குடியேற விரும்புவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தற்போது உள்ள குடியேற்றக் கொள்கையில் உள்ள குளறுபடிகளைக் களைந்து, அதில் உள்ள அரசியலை நீக்கி, முழுமையான தீர்வைத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியேறிகளின் நாடு என்ற அமெரிக்காவின் பாரம்பரியத்தை சிதைக்காத வகையில் புதிய குடியேற்றக் கொள்கை அமையும்.
அதேபோல, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியிருப்போர், அதற்குரிய அபராதத்தைக் கட்டவும், அமெரிக்க ஆங்கிலத்தை கற்கவும், பொறுப்பான அமெரிக்க குடிமக்களாக மாற முன்வந்தால், அவர்களை ஆதரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications