இந்தியா, கஸகஸ்தான் அணு ஒப்பந்தத்தில் கையெழுதது
டெல்லி: இந்தியாவும், கஸகஸ்தானும் அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட ஐந்து ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டன.
கஸகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ் நான்கு நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
இன்று அவரும், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சந்தித்துப் பேசினர். பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் முன்னிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இதில் முக்கியமானது இரு நாடுகளுக்கும் இடையிலான சிவில் அணு சக்தி ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில், இந்திய அணு சக்தி கார்ப்பரேஷனும், கஸகஸ்தான் அணு சக்தி கழகமான கஸடோம்பிரோம் நிறுவனமும் கையெழுத்திட்டன.
இதுதவிர கைதிகள் பரிமாற்றம், உலக வர்த்தக கழகத்தில் கஸகஸ்தானை இணைக்க உதவுவது, இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் கேஎம்ஜி இடையிலான ஒப்பந்தம் ஆகியவை மற்ற ஒப்பந்தங்கள்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெறுவதால் அவரது சார்பில் பிரணாப் முகர்ஜி கஸகஸ்தான் அதிபரை சந்தித்தார். மேலும், வழக்கமாக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் ஹைதராபாத் ஹவுஸுக்குப் பதில் ராஷ்டிரபதி பவனில் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications