தூத்துக்குடியில் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பரவி வரும் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவங்காடு, சவேரியர்புரம், பழைய காயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த பொதுமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு கடந்த இருநாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதில் ஏரல் அம்மாதோப்பு பகுதியை சேர்ந்த குணசெல்வம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று வரை தூத்துக்குடி மூனுசென்ட் அந்தோணியர்புரம், முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளை சேர்ந்த மேலும் 50 பேர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை அருகேயுள்ள வடக்கு சிலுக்கன் பட்டியை சேர்ந்த ராஜ்குமார் மகன் ராஜாசெல்வம் என்ற குழந்தையும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையில் இன்று காலை இறால் கம்பெனியில் வேலை பார்த்து வந்த முனுசென்ட் அந்தோணியர்புரத்தை சேர்ந்த முருகன் என்பவர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இவருடன் சேர்ந்து வாந்தி பேதிக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதுவரை 22 பெண்கள் உள்பட 41 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏரல் பகுதியில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 7 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications