கொழும்பில் தகவல் தொடர்பு தற்காலிகமாக துண்டிப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு அங்கு தகவல் தொடர்புகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன.
'தங்கள் உடைமைகளையே அழித்துவிட்டுப் பின்வாங்கி, நேரம் வரும்போது தாக்குவது' என்று ஒரு யுத்த தந்திரம் உண்டு. இந்த தந்திரத்தைப் பயன்படுத்தியே ரஷ்யப் படைகள் 1812-ல் நெப்போலியனையும், 1941-ல் ஹிட்லரின் நாஜிப் படைகளையும் (மொத்தம் 15 லட்சம் வீரர்கள் இறந்த சோக வரலாறு அது) தோற்கடித்தனர்.
ஈழப் போர்முனைகளிலிருந்து வரும் செய்திகள் கிட்டத்தட்ட இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது.
வன்னியிலுள்ள ஒரு செய்தியாளர், ராணுவத்தின் இழப்பு கணக்கெடுக்க முடியாத அளவுக்கு உள்ளதாகவும், வெள்ளம் பூரணாக வடிந்தபிறகே அறுதியிட்டுக் கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பலியானோர் எண்ணிக்கை குறித்து புலிகள் தரப்பு மவுனம் காப்பதில் வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்கிறார்கள்.
தங்களிடம் அகப்பட்டுள்ள ராணுவத்தினரிடம் ஆயுதங்களைப் பறித்துவிட்டு புலிகள் துரத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொழும்பு நகருக்கு தகவல் தொடர்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புலிகளின் தாக்குதல் குறித்த முழு தகவலும் உலகுக்குத் தெரிய வரும்பட்சத்தில் இலங்கை அரசு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வரும்.
பெரிய நாடுகளின் ஆதரவு மற்றும் படை பலத்துடன் புலிகளை எதிர்த்துப் போரிட்டும், முன்னெப்போதும் இல்லாத பேரழிவைச் சந்திக்கும் கட்டத்துக்கு ராணுவம் வந்துள்ளதால், இலங்கை அரசும், ராணுவமும் பெரும் சிக்கலில் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications