இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம்
செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர்.
இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இன்று செம்புகுமார் மற்றும் ஆறுமுக நயினார் என்ற இரு மாணவர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாமகவினர், பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் இரு மாணவர்களையும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஏற்கனவே நான்கு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் தற்போது மேலும் இருவர் மயக்கமடைந்துள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications