குடியரசு தின விழா - மெரீனா கடற்கரையில் சிறப்பான ஏற்பாடுகள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நாளை காலை குடியரசு தின விழாவை கோலாகலமாக நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வழக்கம் போல் இந்த ஆண்டும் குடியரசு தினவிழா சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும். சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நாளை காலை 8 மணிக்கு துவங்கும்.
காந்தி சிலை அருகே நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி வரவேற்கிறார். அதன்பிறகு இந்தியக் கடலோரக் காவல்படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல்துறை இயக்குனர், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை காவல்துறை கமிஷனர் ஆகியோரை முதல்வர் கருணாநிதி, ஆளுனருக்கு அறிமுகம் செய்து வைப்பார்.
பின்னர் ஆளுனர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அதைத் தொடர்ந்து ராணுவம், ரெயில்வே பாதுகாப்புப் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை, சென்னை காவல் துறை ஆகியோரின் அணிவகுப்பு நடைபெறும்.
பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுத்துச் செல்லும். இவை அகில இந்திய வானொலி நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு சென்னைப் பல்கலைக் கழக அருகே நிறைவு பெறும்.
பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், கிராமியக்கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம், வீரதீர செயலைப் பாராட்டி மத்திய அரசு வழங்கும் ஜீவன் ரக்ஷா பதக்கம், மத நல்லிணத்துக்கான கோட்டை அமீர் விருது, கள்ளச் சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்கான காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்குவார்.
மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர்கள் நாளை தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்கள். மாநகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மன்றங்கள், மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications